ADDED : நவ 14, 2026 10:47 PM
அ நிறம் | அளவு
குள்ளஞ்சாவடி: வீட்டின் முன் நிறுத்திய பைக்கை திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
குள்ளஞ்சாவடி அடுத்த பெலாந்தோப்பு, மெயின் ரோட்டை சேர்ந்தவர் பழனிவேல் மகன் கோபாலகிருஷ்ணன்,26; இவர் நேற்று முன்தினம் இரவு தனது பல்சர் பைக்கை நிறுத்தியிருந்தார். நேற்று காலை எழுந்து வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து, பைக் திருடிய நபரை தேடிவருகின்றனர்.
