/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேன் மோதிய விபத்தில் பைக்கில் சென்றவர் பலி
/
வேன் மோதிய விபத்தில் பைக்கில் சென்றவர் பலி
ADDED : ஜூலை 23, 2025 11:23 PM
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த கோ.பவழங்குடியைச் சேர்ந்தவர் அருணாச்சலம், 65; விஜயமாநகரம், புதுவிளாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த அறுமுகம், 54. இருவரும் நேற்று பைக்கில், உளுந்துார்பேட்டை - விருத்தாசலம் சாலையில் சென்றனர்.
செம்பளக்குறிச்சி அருகே சென்றபோது, விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கலைமணி மகன் கலைச்செல்வன், 39; ஓட்டிச் சென்ற வேனை முந்திச் செல்ல முயன்றனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக வேன் மோதியதில் படுகாயமடைந்த அருணாச்சலம் அதே இடத்தில் இறந்தார். படுகாயமடைந்த ஆறுமுகம் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விருத்தாசலம் போலீசார் அருணாச்சலத்தின் உடலை கைப்பற்றி , வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.