UPDATED : நவ 20, 2026 07:28 PM
ADDED : நவ 20, 2026 07:28 PM
நடுவீரப்பட்டு: வீட்டின் எதிரில் மரக்கட்டைகளை போட்டதால் ஏற்பட்ட தகராறில் இருதரப்பை சேர்ந்த 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர்,56; இவர் சி.என்.பாளையம் திடீர்குப்பத்தில் உள்ள தமது மகள் சிவரஞ்சனியை பார்க்க சென்றார். அப்போது அதேபகுதியை சேர்ந்த தனசேகர் மகன் சூர்யா, சிவரஞ்சனியை வீட்டின் எதிரில் ஏன் மரக்கட்டைகளை போட்டு வைத்திருக்கிறாய் என கேட்டு, திட்டி தாக்கினார்.
அதில், ஆத்திரமடைந்த சங்கர், அவரது மனைவி செல்வி, சிவரஞ்சனி, இவரது கணவர் ஏழுமலை ஆகியோர் சூர்யாவை தட்டி கேட்டனர். இதனால் ஏற்பட்ட தகராறில் இருதரப்பினரும் ஒருவரை, ஒருவர் தாக்கிக் கொண்டனர். அதில் படுகாயமடைந்த சிவரஞ்சனி, சூர்யா ஆகிய இருவரும் கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து இருதரப்பு புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் இருதரப்பினை சேர்ந்த சூர்யா, சங்கர், செல்வி, ஏழுமலை, சிவரஞ்சனி ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
