/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் பா.ஜ., கட்சியினர் மறியல்!
/
கடலுாரில் பா.ஜ., கட்சியினர் மறியல்!
ADDED : மார் 01, 2025 05:38 PM

கடலுார்: கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே பாஜக சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உருவ பொம்மையை காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்குடி பகுதியில் எரித்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கடலூர் மாவட்ட பாஜ., தலைவர் அக்னி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 200க்கும் மேற்பட்ட பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பொழுது ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலந்து செல்லுமாறு போலீசார் தெரிவித்தனர். மறுத்த நிலையில் வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது நீண்ட நேரம் தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் நீடித்த நிலையில் திடீரென பாஜகவினர் கடலூர் பாண்டி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை கைது செய்தனர்.