ADDED : மே 26, 2025 03:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் பா.ஜ., சார்பில் ஆப்பரேஷன் சிந்துார் வெற்றியை கொண்டாடும் வகையில் தேசியக்கொடி ஏந்தி பேரணி நடந்தது.
நெல்லிக்குப்பத்தில் நகர பா.ஜ., சார்பில் ஆப்பரேஷன் சிந்துார் வெற்றியை கொண்டாடும் வகையில் ராணுவ வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தும், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தும் தேசியக்கொடி ஏந்தி பேரணி நடந்தது.
நகர தலைவர் கிருபாநந்தன் தலைமை தாங்கி னார். மாவட்ட துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன், பட்டியல் அணி மாநில பொதுச் செயலாளர் ரங்கேஷ், முன்னாள் நகர தலைவர் வேலுமணி, பிரபு, ராஜசேகரன், நாகராஜன், முன்னாள் ராணுவ வீரர் சவுந்தரராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.