/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பார்வையற்ற கல்லுாரி மாணவர்கள் மறியல்
/
பார்வையற்ற கல்லுாரி மாணவர்கள் மறியல்
ADDED : பிப் 21, 2024 10:43 PM

கடலுார் : கடலுாரில் சாலை மறியலில் ஈடுபட்ட பார்வையற்ற கல்லுாரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினர் 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் ஜவான்பவன் சாலையில், பார்வையற்ற கல்லுாரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினர் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் மொத்த ஆசிரியர்களை கணக்கிட்டு, அதில் பார்வையற்றவர்களுக்கு 1 சதவீத இடஒதுக்கீட்டை சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு, முதுகலை ஆசிரியர் தேர்வு மூலம் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். கவுரவ விரிவுரையாளர்கள், பகுதிநேர இசை ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் தொகுப்பூதிய அடிப்படையில் 2 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை நிரந்தரம் செய்ய வேண்டும்.
வேலை இல்லாதோருக்கான உதவித் தொகையை ஆயிரம் ரூபாயில் இருந்து 5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் மறியலில் ஈடுபட்ட 13 பேரை கைது செய்தனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.