/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பராமரிப்பின்றி 'பிளிங்கர்ஸ்' விளக்குகள் வீண்: மாவட்ட காவல் துறை கண்டுகொள்ளுமா
/
பராமரிப்பின்றி 'பிளிங்கர்ஸ்' விளக்குகள் வீண்: மாவட்ட காவல் துறை கண்டுகொள்ளுமா
பராமரிப்பின்றி 'பிளிங்கர்ஸ்' விளக்குகள் வீண்: மாவட்ட காவல் துறை கண்டுகொள்ளுமா
பராமரிப்பின்றி 'பிளிங்கர்ஸ்' விளக்குகள் வீண்: மாவட்ட காவல் துறை கண்டுகொள்ளுமா
ADDED : மே 14, 2024 05:38 AM

விருத்தாசலம்: கடலுார் மாவட்டத்தில் விபத்துக்களை தடுக்க, முக்கிய சாலைகளில் அமைக்கப்பட்ட பிளிங்கர்ஸ் விளக்குகள், பெரும்பாலான இடங்களில் பராமரிப்பின்றி காட்சி பொருளாக மாறியுள்ளது.
கடலுார் மாவட்டத்தில் விபத்துக்களை கட்டுப்படுத்த, முக்கிய சாலை சந்திப்புகள் மற்றும் அடிக்கடி விபத்து நடக்கும் பகுதிகளாக கண்டறியப்பட்ட இடங்களில், பிளிங்கர்ஸ் விளக்குகள், மாவட்ட காவல் துறை முயற்சியால் அமைக்கப்பட்டது. இதன் மூலம் விபத்துக்கள் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், அவைகள் முறையாக பராமரிக்கப்படாமல், பல இடங்களில் பிளிங்கர்ஸ் விளக்குகள் காட்சி பொருளாக மாறியுள்ளது.
விருத்தாசலம் நகராட்சி அலுவலகம், ஆர்.டி.ஓ., தாசில்தார், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், கல்லுாரிகள், வங்கிகள், பிரபல கோவில்கள் உள்ளன.
அதுபோல், திருச்சி - சென்னை மார்க்கத்தில் பிரதான ரயில் நிலையம் உள்ளது. வாகன பெருக்கம் காரணமாக நகரின் பிரதான பகுதிகளான ஜங்ஷன்ரோடு, கடலுார் ரோடு, பெண்ணாடம் ரோடு, வேப்பூர் ரோடு ஆகிய பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது.
மேலும், பொது மக்களின் வாகனங்கள், ஆங்காங்கே நிறுத்தப்படுவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கிறது. அதுபோல், வணிக நிறுவனங்களுக்கு சரக்கு ஏற்றி வரும் லாரிகள், சாலையோரம் நிறுத்தி பொருட்களை இறக்கும்போது நெரிசல் ஏற்படுகிறது. பிரதான சாலையில் பஸ் நிலையம் உள்ளதால் ஓட்டுனர்கள், பயணிகள் மிகுந்த சிரமமடைகின்றனர்.
இதனால் விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நகரின் பிரதான சாலைகளில், 24 மணி நேரமும் ஒளிரும் வகையில் பிளிங்கர்ஸ் விளக்குகள் பொறுத்தப்பட்டன. தானியங்கி பிளிங்கர்ஸ் இயங்கும்போது, வாகனங்களின் வேகம் குறைந்து காணப்பட்டது. ஆனால், ஓரிரு மாதங்களே பயன்பாட்டில் இருந்த நிலையில் அவை செயல்படாமல் காட்சிப் பொருளாக மாறியது.
மேலும் மழை வெயில் காலங்களில் துருபிடித்து, ஆங்காங்கே பாதசாரிகள், பஸ்சுக்கு காத்திருந்த பயணிகள் மீது முறிந்து விழுந்தன. தற்போது, காலை, மாலை வேளைகளில் வாகன போக்குவரத்து அதிகமாக இருப்பதால் பிளிங்கர்ஸ்களை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால், விபத்துகளை தவிர்க்க முடியும். அதுபோல் முறிந்து விழுந்த கம்பங்களை புனரமைக்க வேண்டும்.
கடலுார் - விருத்தாசலம் - சின்னசேலம் கூட்ரோடு (சி.வி.எஸ்.சாலை) வரை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தி, சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு விட்டதால் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் பெரியார் நகர், தாசில்தார் அலுவலகம், பூதாமூர் பிரிவு சாலை, ஸ்டேட் பாங்க் பஸ் நிறுத்தம், பாலக்கரை, நீதிமன்ற வளாகம் ஆகிய பகுதிகளில் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.
எனவே, விருத்தாசலம் நகரில் வாகனங்களை வேகத்தை கட்டுக்குள் கொண்டு வர, காட்சிப் பொருளான பிளிங்கர்ஸ் கம்பங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல், மாவட்டம முழுவதும் பிளிங்கர்ஸ் விளக்குளை பராமரிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

