ADDED : செப் 11, 2025 03:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் ரத்த தான விழிப்புணர்வு பரப்புரை நடந்தது
பல்கலை கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் நடந்த நிகழ்ச்சிக்கு, துறை தலைவர் பவானி தலைமை தாங்கினார். நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் அன்பழகன் வரவேற்றார்.
இளையோர் செஞ்சிலுவை சங்க மண்டல ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் பங்கேற்று, ரத்த தான தேவை, முக்கியத்துவம் குறித்தும், செஞ்சிலுவை சங்க செயல்பாடுகள் குறித்தும் பேசினார்.
ரத்ததான கழகத் தலைவர், சமூக சேவகர் ராமசந்திரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று ரத்த தானம், உறுப்பு மற்றும் உடல் தான நடைமுறைகள் குறித்து பேசினார்.
தனி அதிகாரி செந்தில்நாதன் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை இளையோர் செஞ்சிலுவை சங்க தனி அதிகாரிகள் கண்ணன், ராமச்சந்திரன் செய்திருந்தனர்.