
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு மருத்துவமனையில், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.
தலைமை மருத்துவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். ரத்த வங்கி அதிகாரி குலோத்துங்க சோழன், செவிலியர்கள் வெற்றிக்கொடி, கல்பனா, கவிதா, ஆய்வக நுட்புனர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கவுரவ தலைவர் மணிகண்டராஜன் முகாமை துவக்கி வைத்தார். இதில், செயற்குழு உறுப்பினர் ஸ்டாலின், மணிபாலன், சூர்யா, ஜம்புராஜ், பெண்ணாடம் அரிமா சங்க தலைவர் சக்திவேல் உட்பட பலர் பங்கேற்றனர். முகாமில், 20 யூனிட் ரத்தம் தானமாக வழங்கப்பட்டது.