
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலுார் கோண்டூர் கிளை மற்றும் கடலுார் அரசு தலைமை மருத்துவமனை சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.
கோண்டூரில் நடந்த முகாமில், மாவட்ட தலைவர் முகம்மது யாசின் தலைமை தாங்கினர். அரசு தலைமை மருத்துவமனை டாக்டர் வினோத், மேற்பார்வையாளர் கதிரவன், ஆலோசகர் சந்தோஷ்குமார் முன்னிலை வகித்தனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு நடந்த ரத்த தான முகாமை எஸ்.பி., ஜெயக்குமார் துவக்கி வைத்தார். முகாமில் ஏராளமானோர் ரத்த தானம் செய்தனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் மாவட்ட செயலாளர் அப்துல் வஹாப், பொருளாளர் அப்துல் காதர், துணைத் தலைவர் யாசர் அராபத், துணை செயலாளர் உபைதுல்லா, மருத்துவரணி செயலாளர் ஷர்புதீன் உட்பட பலர் பங்கேற்றனர்.