
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மந்தாரக்குப்பம் : நெய்வேலி லிக்னைட் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் ரோட்டரி ரத்த மையம் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.
மந்தாரக்குப்பத்தில் நடந்த முகாமை திட்ட அலுவலர் நடராஜன் தலைமை தாங்கினார். சுரேந்திரா மருத்துவமனை டாக்டர் ராஜேந்திரன் முகாமை துவக்கி வைத்தார். முகாமில் 35 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது. முகாமில் 75வது முறையாக ரத்த தானம் வழங்கிய ரமேஷ் கவுரவிக்கப்பட்டார்.
நிகழ்ச்சியில் மிட்டவுன் ரோட்டரி சங்க தலைவர் வெங்கடேஷ், நெய்வேலி லிக்னைட் சிட்டி ரோட்டரி சங்க தலைவர் சீனிவாசன், பவர் சிட்டி சங்க தலைவர் சரவணகுமார், சங்கத் தலைவர்கள் சம்சுதீன், ரவிச்சந்திரன், முன்னாள் ஆளுநர்கள் நாகரத்தினா, பாலாஜி, டாக்டர் இளங்கோவன், சிவசங்கரன், முருகானந்தம், ரமேஷ், சந்திரமவுலி, ஆல்பர்ட் ஜேசுதாஸ் பவுல்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்

