/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காற்றழுத்த தாழ்வு எதிரொலி படகுகள் பாதுகாப்பாக நிறுத்தம்
/
காற்றழுத்த தாழ்வு எதிரொலி படகுகள் பாதுகாப்பாக நிறுத்தம்
காற்றழுத்த தாழ்வு எதிரொலி படகுகள் பாதுகாப்பாக நிறுத்தம்
காற்றழுத்த தாழ்வு எதிரொலி படகுகள் பாதுகாப்பாக நிறுத்தம்
ADDED : அக் 25, 2025 11:14 PM

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் மீனவர்கள் 7ம் நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
வடகிழக்கு பருவமழை கடந்த 16ம் தேதி துவங்கியதை தொடர்ந்து, கடலுார் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 19ம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என, மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்தது. அதன்படி, கடந்த 6 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இந்நிலையில், வங்கக் கடலில் மீண்டும் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு இருப்பதால், வங்கக்கடலில் சூறைக்காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடலுார் மாவட்டத்தில் 7ம் நாளாக நேற்றும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால், கடலுார் மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட இடங்களில் மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

