/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'மின்நிறுத்தம் செய்வதில் கூடவா எல்லை பிரச்னை; ' நாய்களோடு முடிந்த விபரீதம்

ADDED : அக் 16, 2024 07:09 AM
கடலுார் அருகே மின்வாரிய ஊழியர்கள் எல்லை பிரச்னை காரணமாக மின்நிறுத்தம் செய்வதில் தாமதமானதால் அறுந்து கிடந்த மின் கம்பியில் சிக்கிய மூன்று நாய்கள் பலியானது.
வடகிழக்கு பருவமழை துவங்கி மாவட்டம் முழுவதும் பெய்து வருகிறது. கடலுார் மாநகரில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம், கடலுார் கோண்டூர் பாப்பம்மாள் நகரில் உள்ள ஒரு தெருவில், மழையால் மின்கம்பி அறுந்து விழுந்தது. இதை பார்த்த சிலர் மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் கூறியுள்ளனர்.
அப்போது, இது எங்களுடைய எல்லை இல்லை, வேறு மின்வாரிய அலுவலகத்திற்கு போன் செய்யுங்கள் என, தட்டி கழித்துள்ளனர். அதேப் போல மற்றொரு ஊழியருக்கு போன் செய்த போதும் மின்நிறுத்தம் செய்யவில்லை. இதற்கிடையே அவ்வழியே வந்த மூன்று நாய்கள், அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் நடந்தது.
தாமதமாக வந்த மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். ஆபத்து நேரத்தில் மின்நிறுத்தம் செய்யக்கூடவா எல்லை பிரச்னை என, பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நல்ல வேலையாக மனிதர்கள் அவ்வழியே நடந்து செல்லாததால் உயிர் தப்பியுள்ளனர். நாய்கள் மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பொதுமக்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.