/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிமென்ட் துாண் விழுந்து சிறுவன் பலி
/
சிமென்ட் துாண் விழுந்து சிறுவன் பலி
ADDED : மே 19, 2025 06:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: ஊஞ்சல் விளையாடிய சிறுவன் தலையில் அடிபட்டு இறந்தார்.
பண்ருட்டி அடுத்த பணப்பாக்கம், நத்தமேடு தெருவை சேர்ந்தவர் வினோத்குமார் மகன் பூர்விக்,9; பண்ருட்டியில் தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டின் சிமென்ட் துாணில் சேலையில் கட்டப்பட்ட ஊஞ்சலில் விளையாடினார்.
அப்போது எதிர்பாராத விதமாக சிமென்ட் துாண் பாரம் தாங்காமல் பூர்விக் தலையில் விழுந்தது.
இதில், பலத்த காயமடைந்த சிறுவனை புதுச்சேரி ஜிப்மரில் சேர்த்தனர்,
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலை இறந்தார்.
புகாரின் பேரில், புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.