/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆற்றில் குளித்த சிறுவன் மாயம்; தேடும் பணி தீவிரம்
/
ஆற்றில் குளித்த சிறுவன் மாயம்; தேடும் பணி தீவிரம்
ADDED : டிச 23, 2024 05:07 AM
விருத்தாசலம், : விருத்தாசலம் அருகே ஆற்றில் குளித்த சிறுவன் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கருவேப்பிலங்குறிச்சி அடுத்த மோசட்டை கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் மனைவி சரஸ்வதி. இவர்களது மகன் சந்திரசேகர், 10. அதேபகுதியில் உள்ள அரசு துவக்க பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று பகல் 1:00 மணியளவில் தனது தாய் சரஸ்வதியுடன், சந்திரசேகர் அதே பகுதியில் உள்ள வெள்ளாற்றில் குளிக்க சென்றுள்ளார்.
அப்போது, ஆற்றில் குளித்த சிறுவன் சந்திரசேகர் திடீரென மாயமானார்.
தகவலறிந்து சென்ற விருத்தாசலம் தீயணைப்பு வீரர்கள் நேற்று பகல் 2:00 மணியில் இருந்து சிறுவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஆனால் அவர் கிடைக்கவில்லை. ஆற்றில் குளித்த சிறுவன் திடீரென மாயமானதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
மேலும், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சிறுவன் மாயமானது குறித்து விசாரித்து வருகின்றனர்.

