ADDED : ஜன 17, 2025 06:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் கடலுார், கூத்தப்பாக்கம் கிளையின் மாதாந்திர கூட்டம் நடந்தது.
கூத்தப்பாக்கத்தில் நடந்த கூட்டத்தி்ல் கிளை துணைத் தலைவர் ராஜகோபாலன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் பிரணதார்த்திஹரன் வரவேற்றார். பொருளாளர் கணேசன், புதிய பஞ்சாங்கம் பிப்ரவரி முதல் வாரத்தில் வழங்கப்படும் என்று கூறினார். சங்க நிர்வாகி பிரகாசம் என்பவரின் சமூக சேவையை பாராட்டி நன்றி தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் கிருஷ்ணமூர்த்தி, பாலகுரு, சீனிவாசன், ராமகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
சுரேஷ் நன்றி கூறினார்.