/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சொத்து தகராறில் தம்பி கொலை; 22 ஆண்டிற்கு பின் அண்ணன் கைது
/
சொத்து தகராறில் தம்பி கொலை; 22 ஆண்டிற்கு பின் அண்ணன் கைது
சொத்து தகராறில் தம்பி கொலை; 22 ஆண்டிற்கு பின் அண்ணன் கைது
சொத்து தகராறில் தம்பி கொலை; 22 ஆண்டிற்கு பின் அண்ணன் கைது
ADDED : செப் 24, 2024 06:47 AM

நெல்லிக்குப்பம் ; நெல்லிக்குப்பம் அருகே சொத்து தகராறில் தம்பியை கொலை செய்த வழக்கில், 22 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த பத்திரக்கோட்டை ஆராய்ச்சிக்குப்பத்தை சேர்ந்தவர்கள் சுப்ரமணியன்,57, வீரப்பன்,54, திருமுருகன்,51. சகோதரர்களான இவர்கள் மூவருக்கும் சொந்தமான வீட்டு மனையை சுப்ரமணியன், திருமுருகன் இருவரும் எடுத்துக்கொண்டு, வீரப்பனுக்கு சேர வேண்டிய பங்கிற்கு பணமாக கொடுக்க முடிவு செய்தனர். இதில், திருமுருகன் தான் கொடுக்க வேண்டிய பணத்தை வீரப்பனுக்கு கொடுத்துள்ளார்.
சுப்ரமணியன் பணம் கொடுக்க மறுத்துள்ளார்.இதனால் வீரப்பனுக்கும் சுப்ரமணியனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில், 2002ம் ஆண்டு சுப்ரமணியன் மற்றும் 6 பேர் சேர்ந்து வீரப்பனை கொலை செய்து அங்குள்ள கிணற்றில் வீசினர். இதுபற்றி நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து, 4பேரை கைது செய்தனர்.
இவ்வழக்கில் தலைமறைவான சுப்ரமணியன் நேற்று ஊருக்கு வந்தார். அதை அறிந்த நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார், அவரை கைது செய்தனர்.
கொலை வழக்கில் தேடப்பட்டவர் 22 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.