/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விதிமுறைப்படி கட்டடம்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு
/
விதிமுறைப்படி கட்டடம்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ADDED : மே 05, 2025 06:21 AM
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் ஆலை ரோட்டில் புதிதாக கட்டப்படும் கடைகளை அரசின் விதிமுறைப்படி கட்ட வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம் முழுதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் கட்டடம் கட்ட உரிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். தெருக்களில் வீடு, கடை கட்டுவது என்றால் சாலையில் இருந்து 6 அடி பின்னால் தள்ளி கட்ட வேண்டும். மாநில நெடுஞ்சாலையை ஒட்டி கட்டுவது என்றால் 15 அடி பின்னால் தள்ளி கட்ட வேண்டும் என்பது போன்ற விதிகளை முறையாக உரிமையாளர்கள் பின்பற்றுகிறார்களா என அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.
நெல்லிக்குப்பம் ஆலை ரோட்டில் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நகராட்சிக்கு சொந்தமான 18 கடைகளை இடிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு பதிலாக 2 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கடைகள் கட்ட டெண்டர் விடப்பட்டுள்ளது. தற்போது இடிக்கப்படும் கடைகள் சாலையை ஒட்டியே இருந்ததால் போக்குவரத்து பாதித்தது. புதியதாக கட்டப்பட உள்ள கடைகளையாவது சாலையை ஒட்டி கட்டாமல் அரசின் விதிமுறைப்படி 15 அடி பின்னால் தள்ளி கட்ட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.