/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெரியார் விருது விண்ணப்பிக்க அழைப்பு
/
பெரியார் விருது விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : டிச 08, 2025 05:52 AM
கடலுார்: சமூக நீதிக்கான பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பிக்க, 'சமூக நீதிக்கான பெரியார் விருது' கடந்த, 1995 ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது பெறுவோருக்கு 5 லட்சம் ரூபாய் மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இவ்விருதாளர் முதல்வரால் தேர்வு செய்யப்படுகிறார். இந்தாண்டிற்கான விருது பெற, தகுதி உடையவர்கள், தேவையான ஆவணங்களுடன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில், வரும் 18 ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

