/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாட்சி சொல்லக்கூடாது என மிரட்டிய 3 பேர் மீது வழக்கு
/
சாட்சி சொல்லக்கூடாது என மிரட்டிய 3 பேர் மீது வழக்கு
சாட்சி சொல்லக்கூடாது என மிரட்டிய 3 பேர் மீது வழக்கு
சாட்சி சொல்லக்கூடாது என மிரட்டிய 3 பேர் மீது வழக்கு
ADDED : செப் 21, 2024 06:22 AM
பண்ருட்டி: பண்ருட்டியில் சாட்சி சொல்லக்கூடாது என மிரட்டிய 3 பேர் மீது பண்ருட்டி போலீசார் வழக்குபதிந்து தேடி வருகின்றனர்.
பண்ருட்டி அடுத்த திருவதிகை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர்கள் தட்சணாமூர்த்தி மகன் பாலு என்கிற ராதாகிருஷ்ணன், மாரியப்பன் மகன் ராமச்சந்திரன், ஆறுமுகம் மகன் குள்ள ஐயப்பன் இவர்கள் 3 பேர் மீதும் கோர்ட்டில் கொலை வழக்கு கோர்ட்டில் விசாரணையில் உள்ளது.
இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்து வரும் திருவதிகை சுண்ணாம்புக்கார வீதியைச் சேர்ந்த விஜயன், 47; மற்றும் சிவமணி, கீதா ஆகியோரை கடந்த 17 ம்தேதி அன்று பாலு உள்ளிட்ட ் 3 பேரும் வழி மறித்து கோர்ட்டில் சாட்சி சொல்லக்கூடாது எனக் கூறி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் பாலு உட்பட 3 பேர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.