/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அனுமதியின்றி பேனர் வி.சி., நிர்வாகி மீது வழக்கு
/
அனுமதியின்றி பேனர் வி.சி., நிர்வாகி மீது வழக்கு
ADDED : ஜன 25, 2024 04:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் அனுமதியின்றி, டிஜிட்டல் பேனர் வைத்த, வி.சி., கட்சி ஒன்றிய துணை செயலாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
திருச்சியில் நாளை வி.சி., கட்சி மாநாடு நடக்கிறது. இதற்காக கடலூர் ஒன்றியம் வரக்கால்பட்டு பகுதியில் ஒன்றிய துணை செயலாளர் தனசேகரன், விளம்பர டிஜிட்டல் பேனர் வைத்திருந்தார். இதற்கு உரிய அனுமதி பெறவில்லை.
இதனால் நெல்லிக்குப்பம் போலீசார் அனுமதி பெறாமல் பேனர் வைத்ததாக, தனசேகரன் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.