ADDED : மே 31, 2025 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குறிஞ்சிப்பாடி : வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்
குறிஞ்சிப்பாடி அடுத்த பெத்தநாயக்கன்குப்பம் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் மகன் சுபாஷ், 22; இவரது சகோதரர் மணிமாறன். கடந்த, 4 மாதங்களுக்கு முன்பு மணிமாறனுக்கும், விருப்பாட்சி பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் மகன் லட்சமணன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் உண்டானது.
நேற்று முன்தினம் சுபாஷ் குறிஞ்சிப்பாடி சென்று வீடு திரும்பியபோது, லட்சுமணன் மற்றும் அவரது தரப்பினர் வழிமறித்து கட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த அவர் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார், லட்சுமணன், 20; உட்பட பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.