ADDED : ஜூன் 11, 2025 07:13 AM
பண்ருட்டி; பண்ருட்டி அருகே முன்விரோதம் காரணமாக முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
பண்ருட்டி அடுத்த மாளிகைமேடு கிழக்கு தெருவை சேர்ந்தவர் கணேசன்,71; விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் மனைவி ஜெயம்மாள். கணேசன் நிலத்தின் அருகே உள்ள வழியாக ஜெயம்மாள் தனது நிலத்திற்கு சென்று வருவது வழக்கம்.
இந்த வழியை கணேசன் தனது பெயருக்கு பட்டா வாங்கி அந்த இடத்தில் கரும்பு பயிரிட்டார். இதனால் கணேசனுக்கும், ஜெயம்மாளுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் உள்ளது. இந்நிலையில் ஜெயம்மாள், இவரது உறவினரான அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன், கண்டமங்கலம் விஜயன், இவரது மனைவி கமலி ஆகிய 4 பேரும், கணேசன் பயிரிட்டிருந்த கரும்பு பயிர்களை சேதப்படுத்தி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
புகாரின் பேரில், பண்ருட்டி போலீசார், ஜெயம்மாள் உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.