/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இருதரப்பு மோதல் 8 பேர் மீது வழக்கு
/
இருதரப்பு மோதல் 8 பேர் மீது வழக்கு
ADDED : நவ 02, 2024 07:29 AM
குள்ளஞ்சாவடி: மது அருந்த பணம் தராததால் ஏற்பட்ட தகராறு தொடர்பாக 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
குள்ளஞ்சாவடி அடுத்த, அகரம் ஆலப்பாக்கம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பாலமுருகன். தீபாவளி அன்று இவரது உறவினர் பாலாஜியிடம் அதே பகுதியை சேர்ந்த பாக்கியராஜ் மகன்கள் மது அருந்த பணம் கேட்டதில் தகராறு ஏற்பட்டது. இதில் இரு தரப்பும் கத்தி மற்றும் கம்பியால் தாக்கிக் கொண்டதில் பெண்கள் உட்பட, 8 பேர் காயமடைந்தனர். அனைவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இருதரப்பு புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார், பாக்கியராஜ், 47, பாலமுருகன்,44; உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

