/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீட்டுமனை தகராறு 9 பேர் மீது வழக்கு
/
வீட்டுமனை தகராறு 9 பேர் மீது வழக்கு
ADDED : பிப் 02, 2025 05:02 AM
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே விட்டு மனை தகராறில் 9 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
நடுவீரப்பட்டு அடுத்த குயிலாப்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ்,49; அதே பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன்,68; இவர்களுக்கிடையே வீட்டுமனை குறித்து பிரச்னை ஏற்பட்டு, முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் இருதரப்பினருக்குமிடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ரமேஷ், அவரது மனைவி வெண்ணிலா, மகன் விஷ்ணு, உறவினர் ஆனந்த் ஆகியோரும், பிரபாகரன், அவரது மகன் பாஸ்கர், உறவினர் பத்மநாபன், தியாகராஜன், கதிரவன் ஆகியோரும், ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு, மிரட்டல் விடுத்தனர்.
பிரபாகரன் மற்றம் ரமேஷ் ஆகியோரின் புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் இரு தரப்பை சேர்ந்த 9 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.