/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அனுமதியின்றி பேனர் த.வெ.க.,வினர் மீது வழக்கு
/
அனுமதியின்றி பேனர் த.வெ.க.,வினர் மீது வழக்கு
ADDED : மே 11, 2025 01:43 AM
கடலுார்: கடலுாரில் போக்குவரத்திற்கு இடையூறாக பேனர் வைத்ததாக, த.வெ.க., நிர்வாகிகள் 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
த.வெ.க., கடலுார் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார். நேற்று முன்தினம் இவரது இல்ல விழாவிற்காக கடலுார் ஜவான் பவான் சந்திப்பிலிருந்து பாரதி ரோடு தனியார் மண்டபம் வரையில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.
பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக பேனர் வைத்ததாக புதுநகர் போலீசார், த.வெ.க., தலைமை நிலைய செயலாளர் ராஜசேகர், கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார், வார்டு செயலாளர் செந்தில்குமார், பேனர் தயாரிப்பாளர் முருகன் மீது வழக்குப் பதிந்தனர்.
ஜவான்பவான் சந்திப்பில் பேனர் வைத்ததாக திருப்பாதிரிப்புலியூர் போலீசார், மாவட்ட செயலாளர் ராஜ்குமார், சாரதி ஆகியோர் மீது வழக்குப் பதிந்தனர்.