/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ. 1 லட்சம் மோசடி பெண் மீது வழக்கு
/
ரூ. 1 லட்சம் மோசடி பெண் மீது வழக்கு
ADDED : ஆக 05, 2025 01:55 AM
பெண்ணாடம்: மாற்றுத்திறனாளி பெண்ணிடம் கடனுதவி பெற்று தருவதாக ஆசை வார்த்தைக்கூறி பணம் மோசடி செய்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
பெண்ணாடம், சஞ்சீவிராயன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் மனைவி சாந்தி, 30; இவர் வாய் பேச முடியாதவர். இவரது வீட்டின் அருகே வாடகை வீட்டில் வசிப்பவர் செந்தாமரை. இவர், சாந்தியிடம், கடனுதவி பெற்று தருவதாக ஆசை வார்த்தை கூறினார்.
இதனை நம்பிய சாந்தி, செந்தாமரைக்கு 1 லட்சம் ரொக்கம் மற்றும் 1 சவரன் நகையை கொடுத்தார். ஆனால் ஓராண்டுக்கு மேலாகியும் கடன் பெற்று தரவில்லை. பணம், நகையையும் திருப்பி தரவில்லை.
இதுகுறித்து சாந்தி கணவர் சீனிவாசன் பெண்ணாடம் போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து செந்தாமரையை தேடி வருகின்றனர்.