/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குறும்படம் எடுப்பதாக பண மோசடி : வாலிபர் மீது வழக்கு பதிவு
/
குறும்படம் எடுப்பதாக பண மோசடி : வாலிபர் மீது வழக்கு பதிவு
குறும்படம் எடுப்பதாக பண மோசடி : வாலிபர் மீது வழக்கு பதிவு
குறும்படம் எடுப்பதாக பண மோசடி : வாலிபர் மீது வழக்கு பதிவு
ADDED : நவ 13, 2025 07:04 AM
நெய்வேலி: குறும்படம் எடுக்க போவதாக கூறி பெண்ணிடம், ரூ.10 லட்சம் மோசடி செய்த வாலிபர் மீது மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 18ல் உள்ள ஒடிசா வீதியை சேர்ந்தவர் முருகன், 50; இவர் என்.எல்.சி.,யில் நிரந்தர ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சத்தியவாணி.40. இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகன் உள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இவர்களது பக்கத்து வீட்டில் வசித்து வந்த, திருமணம் ஆகாத டேனியல் டோமினிக் சேவியோ.34; என்பவருக்கும் சத்தியவாணிக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது. இதனால், கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், டேனியல் சத்தியவாணியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, புதுச்சேரிக்கு அழைத்து சென்று அங்கு இருவரும் இணைந்து வாழ்ந்தனர்.
இதற்கிடையே டேனியல், தான் குறும்படம் எடுக்கப்போதாகவும் அதற்கு பணம் தேவை எனக்கூறி சத்தியவாணியின் 8.5 சவரன் நகை மற்றும் ரூ. 10 லட்சம் பணத்தை வாங்கிக்கொண்டு சென்னைக்கு சென்றார்.
அதன்பிறகு டேனியல், சத்தியவாணியிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்கினார். இதனால், சத்தியவாணி டேனியலிடம் தனது நகை மற்றும் பணத்தை திரும்ப தருமாறு வலியுறுத்தினார். இதையடுத்து 8.5 சவரன் நகையை திருப்பி கொடுத்த டேனியல், பணத்தை தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.
இதுகுறித்து சத்தியவாணி கொடுத்த புகாரின்பேரில் நெய்வேலி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

