/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிளிமாஞ்சோராவில் ஏறி சாதனை: கடலுார் வாலிபருக்கு பாராட்டு
/
கிளிமாஞ்சோராவில் ஏறி சாதனை: கடலுார் வாலிபருக்கு பாராட்டு
கிளிமாஞ்சோராவில் ஏறி சாதனை: கடலுார் வாலிபருக்கு பாராட்டு
கிளிமாஞ்சோராவில் ஏறி சாதனை: கடலுார் வாலிபருக்கு பாராட்டு
ADDED : நவ 12, 2025 10:32 PM

கடலுார்: கடலுார் வாலிபர் 5895 மீ., உயரமுள்ள மவுண்ட் கிளிமாஞ்சாரோவில் ஏறி சாதனை படைத்ததை தொடர்ந்து, துணை முதல்வர் உதயநிதி நேரில் அழைத்து பாராட்டினார்.
கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த வான்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியதம்பி மகன் சக்திவேல்,32. ஐ.டி.ஐ. படித்துள்ளார். பைக் மெக்கானிக்காக உள்ளார். சிறுவயது முதலே மலையேற்றத்தில் ஆர்வம் உள்ள இவர், இதுவரை தமிழகத்திலுள்ள பொதிகை மலை, சதுரகிரி மலை, பர்வதமலை, வெள்ளியங்கிரி மலை உட்பட பல்வேறு மலைகளில் ஏறி சாதனை புரிந்துள்ளார். மலையேற்றத்தில் ஆர்வம் கொண்ட சக்திவேல், எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் முத்தமிழ்செல்வி தலைமையிலான குழுவினருடன் ஆப்பிரிக்க கண்டத்தின் தான்சானியாவில் உள்ள மிக உயரமான கிளிமஞ்சாரோ சிகரத்தில் கடந்த, அக்.30ல் ஏறத் துவங்கி நவ.5ல், 5 ஆயிரத்து 895 மீட்டர் ஏறி சிகரத்தை தொட்டனர்.
தமிழக துணை முதல்வர் உதயநிதி, கிளிமாஞ்சாரோ சிகரத்தில் ஏறி சாதனை படைத்த கடலுார் சக்திவேலை நேரில் அழைத்துப் பாராட்டினார். மேலும் சக்திவேல் கூறுகையில், 'உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட்டில் ஏறுவதே எனது லட்சியமாக உள்ளது. அதற்குரிய முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளேன்' என்றார்.

