முந்திரி, மரவள்ளி சாகுபடி தொழில்நுட்ப கருத்தரங்கம்
முந்திரி, மரவள்ளி சாகுபடி தொழில்நுட்ப கருத்தரங்கம்
UPDATED : அக் 16, 2026 01:41 AM
ADDED : அக் 16, 2026 01:39 AM

வேப்பூர்: வேப்பூர் அடுத்த கண்டப்பங்குறிச்சியில் தோட்டக்கலைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி இயக்கம் - தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தில் முந்திரி மற்றும் மரவள்ளி சாகுபடி தொழில்நுட்பம் குறித்து மாவட்ட அளவிலான கருத்தரங்க கூட்டம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். தோட்டக்கலைத்துறை மாவட்ட துணை இயக்குனர் சிவக்குமார் வரவேற்றார். வட்டார உதவி இயக்குனர்கள் நல்லூர் அலெக்ஸ், மங்களூர் அருள்தாசன், மங்களூர் மற்றும் நல்லூர் ஒன்றிய விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
அதில், திருவனந்தபுரம் கிழங்கு பயிர்கள் மத்திய ஆராய்ச்சி நிறுவனம், விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலையம் மற்றும் வேளாண் அறிவியல் நிலையம், பாலுார் காய்கறி ஆராய்ச்சி நிலையம், ஏத்தாப்பூர் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம், சேலம் சேகோசேர்வ் நிறுவனம், தமிழ்நாடு முந்திரி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க கூட்டமைப்பினர் முந்திரி மற்றும் மரவள்ளி சாகுபடியில் உள்ள நவீன தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.
மேலும், தோட்டக்கலைத்துறை சார்பில் தோட்டக்கலை பயிர்கள், மதிப்புக் கூட்டிய பொருட்களை கண்காட்சிக்கு வைக்கப்பட்டது.
