தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஜெயிலர்–2 படம் பாதியில் நிறுத்தம்: திரையரங்கில் ரசிகர்கள் ரகளை

ஜெயிலர்–2 படம் பாதியில் நிறுத்தம்: திரையரங்கில் ரசிகர்கள் ரகளை

ஜெயிலர்–2 படம் பாதியில் நிறுத்தம்: திரையரங்கில் ரசிகர்கள் ரகளை


UPDATED : அக் 15, 2026 10:38 PM

ADDED : அக் 15, 2026 09:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2026 10:38 PM ADDED : அக் 15, 2026 09:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிதம்பரம்: சிதம்பரத்தில் நேற்று வெளியான ‘ஜெயிலர்–2’ படம் பாதியில் நின்றதால், ஆவேசமடைந்த ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

ரஜினி நடித்த ஜெயிலர்–2 திரைப்படம் நேற்று வெளியானது. இப்படம், சிதம்பரத்தில், அரசு மருத்துவமனை எதிரில் உள்ள இரு திரையரங்குகளில் வெளியானது.

மதியம் 12 மணி காட்சி படம் ஓடிக்கொண்டிருந்தபோது, திடீரென படம் பாதியில் நின்றது. பழுது சரி செய்ய முடியாததால் தொடர்ந்து படத்தை திரையிட முடியவில்லை.

இதனால், நீண்ட நேரம் காத்திருந்த ரசிகர்கள் ஆத்திரமடைந்து, திரையரங்கை விட்டு வெளியே வந்து கூச்சலிட்டனர். பலர், திரையரங்கு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், திரையங்கமே களேபரமானது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திரையரங்கு ஊழியர்கள், ரசிகர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us