/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் விடையாற்றி உற்சவம்
/
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் விடையாற்றி உற்சவம்
ADDED : மார் 05, 2024 06:23 AM

விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நடந்த விடையாற்றி உற்சவத்தில், பஞ்சமூர்த்திகள் காய்கனி அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரம்மோற்சவம் கடந்த மாதம் 15ம் தேதி துவங்கியது.
கடந்த 20ம் தேதி விபச்சித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரர் காட்சியளிக்கும் ஐதீக நிகழ்ச்சி, 23ம் தேதி தேர் திருவிழா, 24ம் தேதி மாசிமக பிரம்மோற்சவம், 25ம்தேதி தெப்பல் உற்சவம், 26ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழா நிறைவடைந்தது.
அதைத்தொடர்ந்து, கடந்த 27ம் தேதி முதல் வரும் 7ம் தேதி வரை விடையாற்றி உற்சவம் நடந்து வருகிறது.
இதில் 6ம் நாள் விடையாற்றி உற்சவத்தில் பஞ்ச மூர்த்திகள் காய்கனி அலங்காரத்தில் அருள்பாலித்தனர். விநாயகர், சுப்ரமணியர், விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர், பாலாம்பிகை, சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு மகா தீபாரதனை நடந்தது.
ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

