ADDED : மார் 30, 2025 04:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த பெரியகாப்பான்குளம் அரசு துவக்கப்பள்ளியில் நுாற்றாண்டு விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் மணிமேகலை தலைமை தாங்கி, ஆண்டறிக்கை வாசித்தார். தெர்மல் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், கம்மாபுரம் வட்டார கல்வி அலுவலர்கள் கலைச்செல்வி, ஞானவள்ளி முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர் என்.எல்.சி., இந்தியா நிறுவன நிர்வாக இயக்குனர் பிரசன்னகுமார் மோட்டுபள்ளி, மனிதவள இயக்குனர் சமீர் ஸ்வரூப் நுாற்றாண்டு நினைவு வளைவை திறந்து வைத்து, போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்.
விழாவில், வட்டார வள மேற்பார்வையாளர் கோபாலகிருஷ்ணன், ஆசிரியர் பயிற்றுனர் மோகன்தாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.