/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோடைக்கால பயிற்சி மாணவர்களுக்கு சான்றிதழ்
/
கோடைக்கால பயிற்சி மாணவர்களுக்கு சான்றிதழ்
ADDED : மே 22, 2025 11:27 PM

கடலுார்: கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் கோடைகால பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கடலுார் மாவட்டத்தின் சார்பில் 21 நாட்களுக்கு இலவச இருப்பிடமில்லா கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம், கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் நடந்தது.
அதில் தடகளம், கால்பந்து, குத்துச்சண்டை, கையுந்து பந்து மற்றும் டேக்வாண்டோ ஆகிய ஐந்து விளையாட்டுக்களில் சிறந்த பயிற்றுனர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள், ஆசிரியர்கள் மற்றும் சிறந்த விளையாட்டு வீரர்களைக் கொண்டு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டது.
முகாமில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். முகாமின் நிறைவு விழாவில் மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் வரவேற்றார். வீராங்கனை சுமித்ரா, சர்வதேச கையுந்துபந்து விளையாட்டு வீரர் மகாராஜா, கடலுார் இறகுபந்து சங்க பொருளாளர் சிவகுருநாதன் ஆகியோர் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினர். பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் பாஸ்கர் திருக்குறள் புத்தகம் வழங்கினார்.
பயிற்றுனர் மாயகிருஷ்ணன் நன்றி கூறினார்.