/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாரியம்மன் கோவிலில் இன்று செடல் உற்சவம்
/
மாரியம்மன் கோவிலில் இன்று செடல் உற்சவம்
ADDED : ஜூலை 18, 2025 12:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம்: வில்லியநல்லுார் மாரியம்மன் கோவிலில், இன்று செடல் உற்சவம் நடக்கிறது.
புதுச்சத்திரம் அடுத்த வில்லியநல்லுார் மாரியம்மன் கோவிலில், செடல் உற்சவம் கடந்த 15ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று முன்தினம் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. நேற்று காத்தவராயன் கதை, சுவாமி வீதியுலா நடந்தது.
இன்று (18ம் தேதி) மதியம் 2:00 மணிக்கு கழு மரம் ஏறுதல், மாலை 4:00 மணிக்கு செடல் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.