/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மும்முனை போட்டிக்கு தயாராகும் சிதம்பரம் தொகுதி
/
மும்முனை போட்டிக்கு தயாராகும் சிதம்பரம் தொகுதி
ADDED : மார் 20, 2024 05:13 AM
பரங்கிப்பேட்டை, : சிதம்பரம் (தனி) லோக்சபா தொகுதி, ஆளுங்கட்சியான தி.மு.க., கூட்டணியில், வி.சி., கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி தலைவர் திருமாவளவன் மீண்டும் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. அவருக்கு எதிராக பா.ஜ., கூட்டணியில், அக்கட்சி வேட்பாளரை களம் இறக்க முடிவு செய்து, பணியை துவக்கிவிட்டது. இந்த தொகுதியை பொருத்த வரையில் தி.மு.க., கூட்டணி மற்றும் அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளருக்கும் இடையே இதுவரையில், இருமுனை போட்டியே பெரும்பாலும் இருந்து வந்தது.
ஆனால், இந்த தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி சார்பில், அக்கட்சி வேட்பாளரை நிறுத்த முடிவு செய்து, வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக உள்ளது. இதனால், சிதம்பரம் தொகுதியில் மும்முனை போட்டி ஏற்படும். இதனால், இதுவரை தேர்தல்களில் இல்லாத அளவில் தொகுதியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

