/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரம் நாட்டியாஞ்சலி 2ம் நாள் விழா ஐகோர்ட் நீதிபதி சிவஞானம் பங்கேற்பு

ADDED : மார் 10, 2024 07:04 AM

சிதம்பரம், : சிதம்பரத்தில் நடைபெற்று வரும் நாட்டியாஞ்சலியில் நேற்று நடந்த 2ம் நாள் நிழ்ச்சியில் சென்னை ஐகோர்ட் நீதிபதி சிவஞானம், பன்மொழி பண்ணிசை பாமாலை குறுந்தகட்டை வெளியிட்டார்.
சிதம்பரம் தெற்குவீதி வி.எஸ்.டிரஸ்ட் வளாகத்தில், சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளையின் 43வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா நேற்று முன்தினம் துவங்கியது. இரண்டாம் நாளான நேற்றைய விழாவிற்கு அறக்கட்டளை குழுத் தலைவர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். செயலாளர் சம்பந்தம் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினரான சென்னை ஐகோர்ட் நீதிபதி சிவஞானம், புதுச்சேரி இயல், இசை வல்லுநர் சுந்தரம் உருவாக்கிய 'ஆடல்வல்லான் பன்மொழி பண்ணிசை பாமாலை' என்ற குறுந்தகட்டை வெளியிட்டார்.
தொடர்ந்து பெங்களூரு யக்ஞா பண்பாட்டு மைய மாணவியர் பரதம் ஆடி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
பின்னர், சிதம்பரம் ஆரபி அகிலன் மற்றும் சென்னை கயல் நிகழ்கலைகள் மையம் மாணவியர் பரதம் ஆடினர்.
அடுத்து, புதுடில்லி, மாணவிகள் 'மோகினி ஆட்டம்', சென்னை தேஜஸ் நிகழ்கலைகள் பள்ளி மாணவியர்களின் சக்தி மகிமை என்ற நாட்டிய நாடகம் நடந்தது. பின்னர் சென்னை நந்தனா ஆர்.ராய், சென்னை நாட்டிய நிருத் பரதநாட்டிய மைய மாணவியர், சென்னை ரேஷ்மி நாட்டியாலயா மாணவியர் பாரத நாட்டியம் நடந்தது.