/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பராமரிப்பின்றி சிறுவர் விளையாட்டு பூங்கா
/
பராமரிப்பின்றி சிறுவர் விளையாட்டு பூங்கா
ADDED : ஏப் 02, 2025 10:37 PM

மந்தாரக்குப்பம்; கெங்கைகொண்டான் பேரூராட்சி கே.வி.ஆர்., நகரில் சிறுவர் விளையாட்டு பூங்கா 20 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது.
இப்பகுதியில் உள்ள சிறுவர்களுக்கு ஒரே பொழுதுபோக்கு உள்ள விளையாட்டு பூங்காவில் குழந்தைகள் விளையாடி மகிழ்ந்திடும் வகையில் ஏணி, ஊஞ்சல், சறுக்கு மரம் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடைபாதை, ஓய்வு இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன.கெங்கைகொண்டான் பேரூராட்சி அருகில் உள்ள பழைய நெய்வேலி, மேல்பாதி அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த குழந்தைகள், பூங்காவிற்கு வந்து விளையாடி மகிழ்ந்தனர். இந்த சிறுவர் விளையாட்டு பூங்காவில் கடந்த சில ஆண்டுகளாக சரிவர பராமரிப்பின்றி விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்துள்ளது. சிறுவர்கள் விளையாடுவதற்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது.
எனவே, கெங்கைகொண்டான் பேரூராட்சியில் பராமரிப்பின்றி உள்ள சிறுவர் பூங்காவை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.