/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எம்.ஆர்.கே., கல்லுாரியில் துாய்மை பணி
/
எம்.ஆர்.கே., கல்லுாரியில் துாய்மை பணி
ADDED : அக் 01, 2024 06:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., பொறியியல் கல்லூரியில், நாட்டு நலப்பணி திட்டம், ஸ்வச்பாரத் சேவா தூய்மை இந்தியா திட்டம் சார்பில், கல்லூரி வளாகம் மற்றும் விளையாட்டு மைதானம் துாய்மைப்படுத்தும் பணி நடந்தது.
துாய்மை பணியை கல்லுாரி சேர்மன் கதிரவன் துவக்கி வைத்தார். முதல்வர் ஆனந்தவேலு, நிர்வாக அதிகாரி கோகுல கண்ணன், மேலாளர் விஸ்வநாதன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சித்திவிநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். துாய்மை பணியில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் துாய்மை பாரத உறுதிமொழி ஏற்றனர். தூய்மை பணியின்போது, சுமார் 25 கிலோ பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டது.
பிரபு நன்றி கூறினார்.