/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கூட்டுறவு சர்க்கரை ஆலை சீர்கேடு எம்.எல்.ஏ., எச்சரிக்கை
/
கூட்டுறவு சர்க்கரை ஆலை சீர்கேடு எம்.எல்.ஏ., எச்சரிக்கை
கூட்டுறவு சர்க்கரை ஆலை சீர்கேடு எம்.எல்.ஏ., எச்சரிக்கை
கூட்டுறவு சர்க்கரை ஆலை சீர்கேடு எம்.எல்.ஏ., எச்சரிக்கை
ADDED : மார் 14, 2024 04:24 AM

சேத்தியாத்தோப்பு, : சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக சீர்கேட்டை சரி செய்யாவிட்டால் அ.தி.மு.க., சார்பில் போராட்டம் நடத்தப்படும் என, அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., எச்சரித்துள்ளார்.
அவரது அறிக்கை:
சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம், அ.தி.மு.க., ஆட்சியில் சிறப்பாக செயல்பட்டது. தற்போது சீர்கேட்டு வருகிறது. இங்கு, டிசம்பர் மாதத்தில் அரவை துவங்கி, மார்ச் மாதத்திற்குள் 2.50 லட்சம் டன் கரும்பு அரவை செய்திருக்க வேண்டும். ஆனால், அரவை கால தாமதமாக துவங்கி, இதுவரையில் 60 ஆயிரம் டன் கூட அரவை செய்யவில்லை.
அ.தி.மு.க., ஆட்சியில் நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் டன் வரை கரும்பு அரவை செய்யப்பட்டது. மின்சாரம் உற்பத்தி செய்து சர்க்கரை ஆலை பயன்பாட்டிற்கு போக, 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் யூனிட் வரை மின்சார வாரியத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.
உரிய நேரத்தில் கரும்பு வெட்ட ஆர்டர் வழங்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரவை துவங்கிய இரண்டு நாளில் நிறுத்தப்பட்டதால் 60 லட்சம் மதிப்புள்ள கரும்புச்சாற்றை ஆற்றில் திறந்துவிட்டு பாழ்படுத்தியுளளனர்.
கரும்பில் வேர் புழு நோய், மஞ்சள்நோய், காட்டுபன்றிகளால் சேதம் என விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆலை நிர்வாக சீர்கேட்டாமல் மேலும் பாதிப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, சர்க்கரை ஆலையில் நிர்வாக சீர்கேடுகளை சீர்செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி அனுமதியோடு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

