கூட்டுறவு துறை ஊழியர்கள் சென்னையில் இன்று முற்றுகை
கூட்டுறவு துறை ஊழியர்கள் சென்னையில் இன்று முற்றுகை
UPDATED : நவ 04, 2026 11:53 AM
ADDED : நவ 04, 2026 11:50 AM
கடலுார்: தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறை ஊழியர் சங்கம் சார்பில் இன்று சென்னையில் முற்றுகை போராட்டம் நடக்கிறது.
சங்க மாநில தலைவர் பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை:
கூட்டுறவு சார் பதிவாளர் லோகநாயகியை எந்த முகாந்திரமும் இல்லாமல் பணியில் இருந்து விடுவித்ததை ரத்து செய்து, மீண்டும் அவரை அதே பணியில் அமர்த்த வேண்டும். தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 1,200 பேர் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்து, சர்வாதிகார போக்குடன் செயல்படும் கூட்டுறவு சங்க பதிவாளரை இடமாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை, கீழ்பாக்கம் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகம் எதிரில் இன்று (4ம் தேதி) முற்றுகை போராட்டம் நடக்கிறது. இதில், அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
