/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்டத்தில் வாக்காளர் விவரங்கள் சேகரிப்பு: மாற்று கட்சி ஓட்டுகளை வளைக்க தி.மு.க., ' பிளான்'

ADDED : அக் 22, 2025 12:39 AM
த மிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் மும்முரமாக தயாராகி வருகின்றன. தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
தி.மு.க., தலைவர் ஸ்டாலின் 'உடன்பிறப்பே வா' என்ற தலைப்பில் சட்டசபை தொகுதி வாரியாக நிரவாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
அ.தி.மு.க., சார்பில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரசார பயணத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி தொகுதி வாரியாக நடத்தி வருகிறார்.
இதே போன்று, பா.ம.க., தலைவர் அன்புமணி, தே.மு.தி.க.,பொதுச் செயலாளர் பிரேமலதாவும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருவதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
கடலுார் மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளில் வார்டு வாரியாக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தி தேர்தல் தொடர்பாக தி.மு.க., வினர் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
இதன் மூலமாக ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை, எந்த கட்சியைச் சேர்ந்தவர்கள், கட்சிகளின் செல்வாக்கு போன்ற விவரங்களை சேகரிக்க தி.மு.க., திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து தி.மு.க.,வினர் கூறுகையில், 'வார்டு வாரியாக வாக்காளர்கள் விவரங்களை சேகரிக்க உள்ளோம்.
இதன் மூலமாக மாற்று கட்சியினரிடம் தி.மு.க., அரசின் சாதனைகளை கூறி தி.மு.க., விற்கு ஆதரவாக ஓட்டுகளை பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது 'என்றனர்.