/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தாசலம் நகராட்சியில் கலெக்டர் ஆய்வு
/
விருத்தாசலம் நகராட்சியில் கலெக்டர் ஆய்வு
ADDED : அக் 18, 2024 06:44 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் நகராட்சி பகுதிகளில் நடக்கும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் சிபி ஆதித்ய செந்தில்குமார் நேற்று ஆய்வு செய்தார்.
முன்னதாக, நகராட்சி அலுவலகத்திற்கு சென்ற அவர், அங்கு இருந்த பதிவேடுகளை ஆய்வு செய்தார். பின்னர், நகராட்சி அலுவலகத்தில் பருவமழையை எதிர்கொள்ள தயாராக வைக்கப்பட்டுள்ள உபகரணங்களை பார்வையிட்டார்.
பின்னர், நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணி, நாச்சியார்பேட்டையில் குளம் வெட்டும் பணி, பெரியவடவாடி குப்பை கிடங்கு, விருத்தாசலம் - குப்பநத்தம் புறவழிச்சாலை ஆகியவற்றை பார்வையிட்டார்.
அதன்பின், விருத்தாசலம் ஒன்றிய அலுவலகத்திற்கு சென்ற கலெக்டர், அங்கிருந்த கோப்புகள் மற்றும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு செய்தார்.
அப்போது, ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ், ஆர்.டி.ஓ., சையத் மெஹமூத், தாசில்தார் உதயகுமார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.