UPDATED : நவ 15, 2026 05:44 PM
ADDED : நவ 15, 2026 05:44 PM
பண்ருட்டி: கல்லுாரிக்கு செல்ல பெற்றோர் கண்டித்தால் விஷம் குடித்து மாணவர் தற்கொலை செய்தார்.
பண்ருட்டி அடுத்த வீரசிங்கன்குப்பம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுப்ரமணியன், 49; இவரது மகன் சுபாஷ்,22; இவரை, எம்.பி.ஏ., முதல் ஆண்டு பெங்களூரில் படிக்க பெற்றோர் சேர்த்தனர். கல்லுாரிக்கு சில வாரம் சென்ற நிலையில் தீபாவளி விடுமுறையில் வீட்டிற்கு வந்தார்.
ஆனால், கல்லுாரிக்கு மீண்டும் போகவில்லை. இதனால் கடந்த, 10ம் தேதி பெற்றோர் சுபாைஷ கண்டித்தனர். இதனால் மனம் உடைந்தவர், விஷம் குடித்தார்.
அவரை பண்ருட்டி அரசு மருத்துவமனையில் உடனடியாக, சேர்த்தனர். தொடர்ந்து, மேல் சிகிச்சைக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று காலை 9:30 மணியளவில் சுபாஷ் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.
