/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கல்லுாரி ஆசிரியர் நலச்சங்க கூட்டம்
/
கல்லுாரி ஆசிரியர் நலச்சங்க கூட்டம்
ADDED : டிச 30, 2025 03:58 AM
கடலுார்: தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லுாரி ஆசிரியர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் குமராட்சியில் நடந்தது.
மாவட்ட தலைவர் வரதராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கண்ணன் வரவு செலவு கணக்குகளை சமர்ப்பித்தார். கூட்டத்தில் நிர்வாகிகள் பாண்டுரங்கன், கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன், கோவிந்தசாமிஉட்பட பலர் பங்கேற்றனர். ஓய்வூதியர்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை திரும்ப பெற வேண்டும். தி.மு.க.,தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி 70 வயது ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் மற்றும் நியாமாகஓய்வூதியர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட பொருளாளர் ஜெயபாலு நன்றி கூறினார்.

