ADDED : டிச 30, 2025 03:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி: மனைவியை காணவில்லை என, கணவர் போலீசில் புகார் அளித்தார்.
குள்ளஞ்சாவடி அடுத்த புலியூர் பகுதியை சேர்ந்தவர் சிவமணி. இவரது மனைவி ஷோபனா, 32; கடந்த 16ம் தேதி, வீட்டை விட்டு வெளியே சென்ற ேஷாபனா மீண்டும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் காணவில்லை.
இதுகுறித்து சிவமணி அளித்த புகாரின் பேரில், குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

