ADDED : அக் 02, 2024 02:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேப்பூர் : வேப்பூர் அருகே வீடுகள் தோறும் புதிய குடிநீர் பைப் லைன் அமைக்கும் பணி துவங்கியது.
வேப்பூர் அடுத்த நகர் ஊராட்சியில் 2 ஆயிரத்திற் கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி, மாவட்ட கவுன்சிலர் நிதி ரூ.5.50 லட்சம் மதிப்பில், வீடுகள் தோறும் புதிய குடிநீர் பைப் லைன் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கான பணியை நல்லுார் மாவட்ட கவுன்சிலர் சக்திவினாயகம் துவக்கி வைத்தார். அப்போது, தி.மு.க., கிளை செயலர் முருகேசன், ஒப்பந்ததாரர் மணிவேல் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

