
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குரங்கு தொல்லை அதிகரிப்பு
விருத்தாசலம் பெரியார் நகரில் நாய், குரங்குகள் தொல்லையால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
க. சுபாஷ், விருத்தாசலம்.
வேகத்தடை தேவை
விருத்தாசலம், பூதாமூர் இந்திராநகர் சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுவதை தடுக்க, வேகத்தடை அமைக்க வேண்டும்.
ஆர்.கே.அய்யப்பன், விருத்தாசலம்.
பஸ் கால அட்டவணை தேவை
பெண்ணாடம் பழைய பஸ் நிலையத்தில் பஸ் கால அட்டவணை வைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செ.வேல்முருகன், ஓ.கீரனுார்.
சாலையில் மண் குவியல்
வேப்பூர் சர்வீஸ் சாலையின் இருபுறமும், குவிந்து கிடக்கும் மணல் குவியல்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
க. மணிகண்டன், வேப்பூர்.