நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மருத்துவமனையில் இடையூறு
விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் வாகனங்கள் தாறுமாறாக நிற்பதால், நோயாளிகள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர்.
கஸ்துாரி, மணலுார்.
குடிநீர் வசதி தேவை
விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்களுக்கு கழிவறை, குடிநீர் வசதி ஏற்படுத்தித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காமராஜ், கார்குடல்.
டெங்கு பரவும் அபாயம்
கடலுார் பச்சையாங்குப்பம் அருகே சாலையோரம் கொட்டப்பட்டுள்ள தேங்காய்மட்டைகளால், டெங்கு கொசு உற்பத்தியாகும் அபாயம் உள்ளது.
ரமேஷ், பச்சையாங்குப்பம்.
மின் கம்பங்களில் பேனர்கள்
பண்ருட்டியில் மின் கம்பங்களில் விளம்பர பேனர்கள் அதிக அளவில் கட்டுப்பவதை தடுக்க வேண்டும்.
சொக்கலிங்கம், பண்ருட்டி.