நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சுகாதார வளாகம் தேவை
பரங்கிப்பேட்டை சஞ்சிவிராயர் கோவில் தெருவில், சுகாதார வளாகம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுந்தர், பரங்கிப்பேட்டை
பிரதிபலிப்பான் அமைக்கப்படுமா
விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுார் ஊராட்சி எல்லையில் தேசிய நெடுஞ்சாலை பிரிவு சாலையில், ஒளி பிரதிபளிப்பான்கள் இல்லாததால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.
முத்துசாமி, வேப்பூர்.
சாலையில் விபத்து அபாயம்
விருத்தாசலம் - வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில், பரவளூர் பஸ் நிறுத்தம் வழியாக வாகனங்கள் அதிவேகமாக செல்வதால், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
கணேசன், பரவளூர்.
சாலை சீர்கேடு
ஆவட்டியிலிருந்து கழுதுார் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சரத்குமார், ஆவட்டி.

